
Viral video of Varanasi doctors, nurses partying at hospital attracts probe
வாரணாசி தீன் தயாள் உபாத்யாய் மாவட்ட மருத்துவமனையில் உள்ள கான்பரன்ஸ் ஹாலில் சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பார்ட்டி ஒன்றில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அதனை கொண்டாடும் விதமாக மருத்துவமனையில் பார்ட்டி வைத்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாக ம் மற்றும் அதனை சுற்றியுள்ள வளாகத்தில் ஹார்ன் அடிப்பது மற்றும் ஒலி எழுப்புதலுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையிலையே அதிக ஒலியுடன் சினிமா பாடல்களுக்கு நடனமாடியது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் உ.பியில் உள்ள ஜான்சி மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியான நிலையில், இந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் பேசுபொருளாகி உள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத் அரசு அலட்சியமாக செயல்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியதாவது, உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.