
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, மஞ்சு வாரியார், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் விடுதலை-2 . டிசம்பர் 20ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள தினம் தினமும் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

அனிருத், டிஎஸ்பி போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டுவிட்டு இப்பாடலை கேட்பது இனிமையாக இருக்கிறது எனவும், ராஜாவின் இசை இரைச்சல் இல்லா இசை எனவும் ரசிகர்கள் இணையத்தில் கருத்திட்டு வருகின்றனர். இப்பாடல் தங்களை 80’s-க்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலை- 1 திரைப்படம் திரையரங்கில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.விடுதலை-2 திரைப்படம் விஜய்சேதுபதி ஏற்று நடித்திருக்கும் வாத்தியார் கதாப்பாத்திரத்தின் பின்னணியை விரிவாகப் பேசும் எனக்கூறப்படுகிறது.
முழு பாடல் கீழே