
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றதும், ராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் அடுத்த மாதம் பதவியேற்கும் அவர் அமெரிக்காவின் சீர்திருத்த நடவடிக்களை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவம மற்றும் உடல் தேர்வுகள் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து கல்வி, விளையாட்டு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் திருநங்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் திருநங்கைகள் வாழ்வாதரம் கடுமையாக பதிக்கப்படும் என அச்சமடைந்துள்ளனர்.