
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் மணியம்பாடி ஊராட்சியைச் சோந்த பஞ்சாயத்து துணை தலைவி ராசாத்தி தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து அவர் மீது தண்ணிரை ஊற்றினர்.
பின்னர் பேசிய ராசாத்தி, என்னை பஞ்சாயத்து தலைவர் ஜாதி பெயரை வைத்து அவமதித்தும் பதவியை பறிக்க முயற்சித்தும் வருகிறார் என்று கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.