
SBI Plans to open 500 new branches in upcoming financial year says FM
2025ம் நிதியாண்டில் நாட்டின் பொதுத்துறை வங்கியான SBI 500 புதிய கிளைகளைத் திறக்கவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பை SBI வங்கி கிளையில் பேசிய அவர் கூறியதாவது: தற்போது நாடு முழுவதும் SBI வங்கிக் கிளை 23,000 உள்ளது, 6,580 ஏடிஎம்ஸ 85,000 ஊழியர்கள் உள்ளனர். SBI வங்கியின் டிஜிட்டல் செயலி 8 கோடிக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக சில்லறை வியாபாரிகள் 13.2 கோடி பேர் தங்களது வங்கிக்கணக்கை SBI-ல் வைத்துள்ளனர். பல நாடுகளின் மக்கள் தொகைக்கு ஈடான வாடிக்கையாளர்களை SBI வைத்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான உள்கட்டமைப்பு வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 20 கோடி UPI பரிவர்த்தனைகளை கையாண்டுவருகிறது. 2014ம் ஆண்டில் இருந்த நிலையையும், தற்போதுள்ள நிலையையும் பார்த்தால், மூளை முடுக்கெல்லாம் SBI தங்களது சேவகளை வழங்கிவருவதைக் காணமுடிகிறது.
ஜன்தன் யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா, யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா ஆகிய திட்டங்களுக்கு அதிகளவில் SBI பங்களித்துள்ளது என்றார்.