
Rohit sharma blessed with baby boy
ரோகித் சர்மா, ரித்திகா சஜ்தே தம்பதிக்கு நேற்றிரவு குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ரோகித் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பலர் ரோகித்- ரித்திகா இணையருக்கு இணையத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வருகிற 22ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் ரோகித் ச்ரமா பங்கேற்பது சந்தேகம் என கூறப்பட்டுவந்தது. ஆனால், அதற்கான காரணம் முதலில் சொல்லப்படவில்லை. இருப்பினும், அவர் மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.
இந்தச்சூழ்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரோகித்- ரித்திகா தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது