
RCB announced omkar salvi as new bowling coach
IPL 18வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் சவுதி தலைநகர் ஜெட்டாவில் நவம்பர் 24,25ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்காக 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 உள்நாட்டு வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் IPL அணிகள் தங்களது பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஓம்கர் சல்வியை பந்துவீச்சு பயிற்சியாளராக அறிவித்துள்ளது.
இவர், தற்போது ரஞ்சிக்கோப்பை மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்துவருகிறார். இவர் பயிற்சியாளராக இருந்தபோது, ரஞ்சிக்கோப்பை, ஈரானி கோப்பையை மும்பை வென்றது குறிப்பிடத்தக்கது.