
திருமணங்களுக்கு முக்கிய தடையாக இருப்பது ஜாதகம் பொருத்தமாகவே பார்க்கப்படுகிறது. இதனாலே பலருக்கு திருமணம் தள்ளி போய்கொண்டு இருக்கலாம், இல்லை என்றால் ஜாதகம் பொருத்தம் இல்லாமல் இருப்பதால் பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டார்கள் தட்டி கழிக்கலாம். இந்நிலையில் திருமணத்திற்கு ஜாதகம் பொருத்தம் அவசியமா..? ஜாதக பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தால் என்ன நடக்கும் என பலர் யோசிக்கலாம்.
மேலும் பலர் திருமணம் பொருத்தம் இல்லை, நட்சத்திரம் பொருத்தம் இல்லை, இதனால் முதலில் மரத்திற்கு தாலி கட்டி பின், ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இன்னும் சில இடங்களில் பார்க்க முடிகிறது.
கல்யாணத்துக்கு முன் ஜாதக பொருத்தம் என்பது ஒரு உளவியல் பிரச்சனை. உங்களை பற்றி மூன்றாவது நபருக்கு என்ன தெரியும்..? அப்படி தெரிந்திருந்தாலும் இது உங்களது வாழ்க்கை அதில் மூன்றாவது நபர்களை நுழைய வைப்பது உங்களுக்கு பிரச்சனைக்கு தான் வழிவகுக்கும் . மேலும் நட்சத்திரம் போன்ற உயிரற்றவைகள் என்ன வேண்டுமானலும் கூறலாம், இங்கு உங்களது வாழ்க்கையை நீங்கள் தான் கட்டமைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கு தானே என்பது போல் உங்களது வாழ்க்கையை நீங்களே தீர்மாணியுங்கள். முடிவுகளை நீங்களே எடுங்கள். ஜாதகம் உங்களை குஷிப்படுத்த என்ன வேண்டுமானலும் சொல்லலாம். நீங்கள் முயற்சி செய்தால் எந்த முன்னேற்றமும் உங்களது வாழ்க்கையில் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.