
பொடுகு தொல்லை எந்த பாகுபடும் இல்லாமால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடியவை. இதனை சாதாரனமாக எடுத்து கொண்டால் பின்னால் முடி உதிர்தல், தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம். மேலும் முதம், கழுத்து உள்ளிட்ட பகுதிகள் பருக்களையும் சில நேரங்களில் உண்டாக்கலாம். இந்நிலையில் குளிர்காலத்தில் பொடுகு தொல்லையை போக்க சில வழிகள் உள்ளன.
தேயிலை மர எண்ணெய்:

தேயிலை மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளில் இருந்து நீராவி மூலம் தேயிலை எண்ணெய் எடுக்கப்படுகிறது. முகப்பரு, கொப்புளங்கள், தீக்காயங்கள், சளி மற்றும் காயங்களை போக்க தேயிலை மர எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ் மற்றும் பூஞ்சை, பாக்டீரியாக்களை போக்கும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தடவி வந்தால் பொடுகு பிரச்சினை குறைந்து, அடர்த்தியான முடி வளர்ச்சியை உண்டாக்குமாம்.
ரோஸ்மேரி எண்ணெய்:

ரோஸ்மேரி எண்ணெயை உச்சந்தலையில் பயன்படுத்தும்போது இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால்கள் வளர உதவும் என கூறப்படுகிறது. மேலும், ரோஸ்மேரி சாறு வெயில் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை ரேஸ்மேரியை எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை குறைந்து முடி வளர்ச்சிக்கு உதவுமாம்.
தேங்காய் எண்ணெய்:

எளிதில் கிடைக்ககூடிய எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயும் ஒன்று. இந்த எண்ணெய் முடி தண்டுக்குள் புகுந்த சேதமடைந்த முடிகளை சரிசெய்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயுடன் சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து சூடாக்கி தலையில் தேய்ந்து வந்தால் பொழிவான கூந்தலை பெறலாம். இந்த எண்ணெய் முடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து பொடுகு பிரச்சனை உருவாகுவதை தடுக்கிறது.
ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் ஆயிலை சிறிதளவு எடுத்து சூடாக்கி தலையில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் பொடுகு ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் உடல் சூடு தணிந்து புத்துணர்சியை பெறுவீர்கள். இந்த எண்ணெய் முடிக்கு நார்ச்சத்தை வழங்கி முடி உதிர்வதை தடுக்கிறது.
ஆர்கன் எண்ணெய்:

ஆர்கான் எண்ணெய் முடி உதிர்வதை தடுக்கிறது. மேலும் சேதமடைந்த முடி மற்றும் கரடு முரடான முடிகளை பலப்படுத்தும் என கூறப்படுகிறது. முடியில் உள்ள அழுக்குகளில் இருந்து ஏற்படும் செதில்களை போக்கும் தன்மை கொண்டது. வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களால் செறிவூட்டப்பட்ட ஆர்கான் எண்ணெய் சருமத்திற்கு சிறந்த ஈரப்பதத்தை அளிக்கிறது. இந்த எண்ணெய் மாய்ஸ்சரைசிங் லோஷனாகவும் பயன்படுத்தலாம்.