
கடந்த சில மாதங்களாக பெரும் பிரபலங்கள் துணையுடன் பிரிந்து வாழ்வதாக அறிவித்து வருகின்றனர். இவை இளைய சமூகத்திற்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்ப்படுத்தி வருகிறது. மேலும் இளம் சமூகத்தினரிடையே உளவியல் ரீதியான அச்சங்களுக்கு வழி வகுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக திருமணம் ஆனவர்கள் 5 அல்லது அதற்கு மேற்ப்பட்ட வருடங்கள் பின் டிவர்ஸ் அறிவிப்பதற்கு ஒன்று என்றால் சத்தமே இல்லாமால் கிரே டைவர்ஸ் என ஒன்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கிரே டிவர்ஸ் என்றால் என்ன தெரியுமா..?
கிரே டிவர்ஸ் என்பது இளமையில் ஒன்றாக வாழ்ந்து முதுமை காலத்தில் பிரிந்து வாழ்வதாக அறிவிப்பது தான், திருமனமாகி ஒரு தசாப்தம் வாழ்ந்த பின் டிவர்ஸ் அறிவிப்பது கிரே டிவர்ஸ் என்கிறார்கள். இது என்ன என்று கேட்டால் நீங்கள் டிரெண்டிலே இல்லை பூமார் என்கிறார்களாம். அமெரிக்காவில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் படி 65 வயதிற்கும் மேற்பட்ட தம்பதிகள் அதிகமான விவாகரத்து பெறுவதாக கூறப்படுகிறது.
டிவர்ஸ் பெறுவதில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..?
கடந்த 2002ல் உலகிலையே அதிக டிவர்ஸ் நடந்த நாடு என்ற கின்னஸ் சாதனை மாலத்தீவு பெற்றுள்ளது. அந்த ஆண்டில் மட்டும் 10.97 சதவீதம் பேர் டிவர்ஸ் பெற்றுள்ளனராம். உலகளவில் குறைந்த அளவு டிவர்ஸ் நாடுகளில் இந்தியா உள்ளது. இங்கு ஆயிரம் பேருக்கு 0.01 பேர் என்ற அளவில் தான் உள்ளது.
இந்நிலையில் எந்தெந்த காரணத்திற்கெல்லாம் டிவர்ஸ் பெறாலாம் என சட்ட நிபுணர்கள் கூறுவதாவது, ஆண், பெண், உடல்நலக்குறைவு காரணமாக, கணவர் 7 ஆண்டுகள் எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தால், துறவு நிலை, உடலுறவில் ஆர்வமின்மை, முறைகேடான உறவு முறை, உடல் மனரீதியாக மன உளைச்சல் தருதல் ஆகியவற்றுக்காக டிவர்ஸ் கோரலாம், இதற்கு இருவரின் பரஸ்பர சம்மதம் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.