
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேங்கும் மழைநீர் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சில இடங்களில் டெங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வகை காய்ச்சலின் அறிகுறிகள், என்ன செய்யலாம்.. என்ன செய்ய கூடாது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
டெங்கு காய்ச்சல்:
டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஒன்று. இவை உலகின் வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டல நாடுகளில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் ஆகும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:
*காய்ச்சல்
*தலைவலி
*வாந்தி
*உடல்வலி
*உடலில் சிவப்பு தடிப்புகள்
என்ன செய்ய வேண்டும்:
*காய்ச்சல் அறிகுறிகள் உணரப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்
*இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்
*நீர், பழஞ்சாறு, இளநீர், உப்பு-சர்க்கரை கரைசல் அதிகமாக பருக வேண்டும்
*ரத்த தட்டணு அளவை கண்காணிக்க வேண்டும்
*கொசுக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்
*நல்ல ஓய்வு எடுத்தல் வேண்டும்
*தேவையற்ற மருந்துக்களை உட்கொள்ளக்கூடாது
*தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும்
என்ன செய்யக்கூடாது:
*சுய மருத்துவம் கூடாது
*காய்ச்சிய நீரையே பருக வேண்டும்
*முகக்கவசம் அணிதல். பிறருக்கு பரவாமல் இருக்க இருமல், தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்