
Delhi air quality is worse people suffer a lot
புதுடெல்லி: கடுமையான புகையால் நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று(நவம்பர் 13) காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு AQI 361க்கும் கீழே சென்றதாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது.
சாலைகள் தெளிவாகத் தெரியாததால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். சிலருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்பட்டுள்ளது, கடுமையான புகையால் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக சில பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு அதிகளவில் பட்டாசு வெடித்தது இந்த புகைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நவம்பர் 12ம் தேதி விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், மாசு இல்லாத சுற்றுச்சூழலில் வாழ்வது என்பது இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும், இதனை, ஆர்ட்டிகள் 21 உறுதிசெய்கிறது என உச்ச நீதிமன்றம் கூறியது.
மேலும், எந்தமதம் சார்ந்த பண்டிகையும் சுற்றுச்சூழலை மாசடையச் செய்வதை அனுமதிக்கமுடியாது எனவும் வலியுறுத்தியது.