
இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஈரானின் அணு ஆயுத தளங்கள் தான் எங்களது அடுத்து குறி என எச்சரித்துள்ளார்.
ஹமாஸை தொடர்ந்து லெபானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவுடனும் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் கட்டமைப்புகளை குறிவைத்தி இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லாக்களும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சித்து வருவதாக இஸ்ரேல் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஈரானின் அணுசக்தி மையங்கள் தான் எங்களது குறி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இஸ்ரேலை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் கீழ், போடப்பட்ட ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பின்னர் பதட்டங்கள் தீவிரமடைந்தன. அப்போதிருந்து, ஈரான் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.