
சிவகாசி காக்கிவாடன் பட்டியில் ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லூரி மற்றும் கே.ஆர்.பி கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழாவை நேற்று கொண்டாடின. விழாவிற்கு பேராசிரியர் கிருஷ்ண பிரபா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கண்ணன் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர் குருசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கல்வியியல் கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் கலை கல்லூரி முதல்வர் ராம் ஜெயந்தி ஆகியோர் ஆண்டறிக்கைகளை வாசித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிறைவாக, பேராசிரியர் இளையராஜா நன்றியுரை கூறினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.