
தமிழகத்தின் துடிப்பான நகரான சென்னையிலிருந்து இந்தியாவின் சொர்க்கமாக அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் பயணம் செல்லும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
சென்னையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ரயில் இருப்பது பலருக்கும் தெரியாது. 16031 எண் கொண்ட அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில். சென்னை செண்ட்ரலில் இருந்து முதல் நாள் காலை 5.15க்கு கிளம்பி, 3வது நாள் காலை 10.40க்கு காஷ்மீரில் உள்ள MATA VAISHNO DEVI KATRA ஸ்டேசனுக்கு செல்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் இந்த ரயில் பயணத்தில், நீங்கள் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த ரயிலானது ஞாயிறு புதன், வியாழன் மட்டுமே இயங்கும். ரயில் கட்டணம் தான் பலரை ஆச்சர்யப்பட வைக்கும். ஸ்லீப்பர் கேச்சில் வெறும் 920 ரூபாய் தான். காஷ்மீர் செல்ல விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த ரயில் வர பிரசாதம் என்றே கூறலாம்.
இந்த பயணத்திற்கு செல்ல விரும்புவர்கள் பருவநிலைக்கு ஏற்ற ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள்: ஜம்மு-காஷ்மீரின் காலநிலை குளிர்ச்சியாக இருக்கும். ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அவசியமான ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் தேவைக்கேற்ப உணவு மற்றும் மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.
தமிழகத்தின் வெயிலிலிருந்து ஜம்மு-காஷ்மீரின் குளிர்ச்சியான சூழலுக்கு செல்லும் இந்த ரயில் பயணம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.