
actor Mohanlal son working at Spain farm
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ஒரே மகனாகிய பிரணவ் மோகன்லால் ஸ்பெயினில் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதாக அவரது தாய் பேட்டியளித்துள்ளார்.
திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டும் நடிகர்,நடிகைகளின் அடியொற்றி அவர்களுடைய பிள்ளைகள் சினிமாவுக்கு வருவார்கள். அவ்வாறு வருபவர்களில் நிலைத்து நின்று வெற்றிகளை கொடுப்பவர்கள் வெகு சிலரே. அந்த வெகு சிலர்களில் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ஒரே மகனாகிய பிரணவ் மோகன்லால். தற்போது இவர் குறித்த செய்திதான் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.
அந்தத்தகவல் என்னவென்றால் தற்போது அவர் ஸ்பெயினில் ஆடு மேய்துவருகிறார் என்பதுதான். ஹிருதயம், வருஷங்களுக்கு சேஷம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகனாக நடித்த பிரணவ் மோகன்லால், தற்போது ஸ்பெயினில் உள்ள பண்ணையொன்றில் ஆடுகளை மேய்துவருவதாக அவரது தாய் பேட்டியளித்துள்ளார்.
தங்குவதற்கு இடமும், உணவும் மட்டுமே பெற்றுக்கொண்டு சம்பளம் வாங்காமல், ஆடுகளை பராமரிப்பது மேய்ப்பது, பண்ணையை மேற்பார்வை செய்வது என்ற வேலைகளைச் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
வருடத்திற்கு ஒரு படத்தில் நடிக்க தான் வலியுறுத்தினாலும், அதை அவன் கேட்பதில்லை எனவும், தான் நிறைய கதைகளை அவனுக்கு கேட்டுவருவதாகும் குறிப்பிட்ட அவர், தனக்கான நேரமாக இதை எடுத்துள்ளான் என்பதை புரிந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
புணர்ஜனி என்ற திரைப்படத்தில் 2002ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரணவ் மோகன்லால் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.