
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வெள்ளங்கி பகுதியைச் சேர்ந்த மஸ்தான் (வயது 42) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்காக விருதுநகர் ஆர்.ஆர். நகருக்கு வந்துள்ளார். இரவு அவர் தனது நண்பர் நாகுல மீரா ஷேக் உடன் ஆர்.ஆர். நகர் – கன்னிச்சேரி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது விருதுநகரில் இருந்து முதலிப்பட்டி நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ் எதிர்பாராத விதமாக மஸ்தான் மீது மோதியது. இந்த விபத்தில் மஸ்தான் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வச்சக்காரப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் எம். அழகாபுரியைச் சேர்ந்த ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.