
நரிக்குடியில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் வரும் ஏப்ரல் 8, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பருவமழை பாதிப்பால் ஏற்பட்ட நிவாரணம் வழங்கக் கோருதல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்துதல், மற்றும் கிருதுமால் நதி ஆயக்கட்டுக்கு நிரந்தர அரசு ஆணை வெளியிடக் கோருதல் ஆகிய முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன், மாநில துணைத் தலைவர் ஆர்.கே.மகேஸ்வரன், மாநில செயலாளர் இராம முருகன், மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆர்.கோபால கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.