
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டவிரோதமானது என்று தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய போது அப்போதைய மத்திய அரசு மாநில அரசைக் கலந்தாலோசிக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை விரைவாக மீட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.