
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் நரிக்குடியில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் விரைவில் போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசும், ரயில்வே நிர்வாகமும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சுழி மற்றும் நரிக்குடியில் நின்று செல்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.