
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் புது அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தார். இதனைதொடர்ந்து நவம்பர் 3ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தின் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு, உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி விஜய், மாநாட்டில் உள்ள குறை, நிறைகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய அசைன்மென்ட் ஒன்றையும் கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளொயாகியுள்ளது. அதாவது பூத் கமிட்டு தொடர்பாக நிர்வாகிகளிடம் கேட்ட போது கொங்கு மண்டலம், வட மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், ஆனால் தென்மாவட்டங்களில் தான் நாம் வீக்க்கா இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். இதனைகேட்ட விஜய் இன்னும் 3 மாதங்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க வேண்டும், என்றும், பிற கட்சிகளில் இருந்து தவெக-விற்கு தாவும் நிர்வாகிகளை இணைக்கும் நிகழ்சியை இப்போது செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், நிர்வாகிகளுடன் தனி தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், விக்கிரவாண்டியில் கூடிய மக்களின் அன்புக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்வேன் என கண் கலங்கியதாக கூறப்படுகிறது.