
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மம்சாபுரம் பேரூராட்சி அமைச்சியார்பட்டி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரரும், சமூகநீதிப் போராளியுமான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் திருவுருவ சிலை அமைப்பதற்கான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிதியுதவி வழங்கியுள்ளார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த திருவுருவ சிலை அமைக்கும் பணிக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அமைச்சியார்பட்டி கிராம மக்கள் மற்றும் இமானுவேல் சேகரன் அவர்களின் ஆதரவாளர்கள் K.T.R. அவர்களின் இந்த பெருந்தன்மைக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். அமைச்சியார்பட்டி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்கப்படுவது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. சுதந்திர போராட்ட வீரரின் தியாகத்தையும், சமூகநீதிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்த சிலை முக்கியத்துவம் பெறும் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிதியுதவி மூலம் விரைவில் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.