

சரிவை சந்தித்து வரும் மக்கள் தொகையை பெருக்க புதுமன தம்பதிகள் ஹனிமூன் செல்ல அரசு நிதி வழங்க ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 2 வருடங்களை கடந்து நடந்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யாவின் மக்கள் தொகை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தொகையை பெருக்க ரஷ்யா அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவில் பாலியல் சார்ந்த துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தம்பதிகள் இடையே பினைப்பை உருவாக்க ரஷ்யா முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணைய சேவை துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், திருமணமான புது தம்பதிகள் ஹனிமூன் செல்ல 26,300 ரூபிள் அளவு அரசு நிதி வழங்க ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜப்பானை தொடர்ந்து ரஷ்யாவும் மக்கள் தொகை சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.ரஷ்யாவில் உள்ள கபரோவ்ஸ்கில், 18 முதல் 23 வயதுடைய பெண்கள் குழந்தை பெறுவதற்கு £900 வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் செல்யாபின்ஸ் பிராந்தியத்தில் முதல் குழந்தைக்கு 8,500 ரூபிள் வெகுமதி வழங்கப்படுகிறது.