
சென்னை: வேளச்சேரியில் இளம்பெண் ஒருவர் 6 பீர் குடித்துவிட்டு முதியவருடன் உல்லாசமாக இருந்த நிலையில், நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வேளச்சேரி காவல் நிலையத்திற்கு நெஞ்சுவலியால் தனியார் விடுதி ஒன்றில் இளம்பெண் மரணமடைந்தாக தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளம்பெண்ணுடன் தங்கி இருந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த முதியவர் சிந்ததிரிபேட்டையை சேர்ந்த ஜோதி என்பதும், இளம்mபெண் வில்லைவாக்கத்தை சேர்ந்த ரம்யா (27) என்பதும் அவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ அன்று ரம்யா 6 பீர் வாங்கி வந்துள்ளார். அதில் 4 பீரை இரவு குடித்து விட்டு முதியவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், மருத்துவமனை செல்லலாம் என முதியவர் கூறியதற்கு இல்லை வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் காலையில் எழுந்த ரம்யா மிதமிருந்த 2 பீரையும் குடித்துள்ளார். இதனால் மீண்டு நெஞ்சு வலி ஏற்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், நெஞ்சு வலியால் இளம்பெண் இறந்தார அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.