
அமெரிக்காவின் பெரும் தொழிலதிபரான எலான் மாஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் டொனால்ட் டிரம்ப் உருவாக்கும் துறையால் சீன பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என சீன அரசின் கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் பகுதியில் உள்ள சீன பல்கலை கழகத்தின் முதல்வரும், சீன அரசின் கொள்கை ஆலோசகருமான ஜெங் யோங்னியன், சர்வதேச விவகாரங்களுக்கான நடத்திய கூட்டரங்கில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் டிரம்ப் அமெரிக்காவின் மறுசீரமைப்புகென புதிய துறையை உருவாக்குகிறார். இதனால் அமெரிக்காவில் ஏராளமான விதிமுறைகளை அகற்றவும், அரசு அதிகாரிகளை குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் டிரம்ப் வெற்றி பெற்றால் சீன பெரும் அச்சுறுத்தலை சந்திக்கும் என்றும், இந்த திட்டத்தால் அமெரிக்கா புதிய போட்டி தன்மை கொண்ட முதலாளித்துவ நாடாகும். இது சீனாவை மட்டுமல்லாமல் பிற ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்றார்.
சீனாவுடன் நேரடி போருக்கு விரும்பாத டிரம்ப்க்கு புவிசார் அரசியல் ஒரு கருவியாக அமையும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சீன உள்நாட்டு சந்தை மற்றும் மறுசீரமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் அதிக அமெரிக்க முதலீடு மற்றும் அமெரிக்க மக்களை அனுமதிக்க வேண்டும். இதனால் அமெரிக்காவில் உள்ள சின எதிர்ப்பாளர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.