
நவமபர், டிசம்பர், மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் காலமாகும், இந்த மாதங்களில் சுற்றுலா செல்ல திட்டமிடுவர்கள் இந்த இடங்களை தேர்வு செய்யலாம்.

சுந்தரவன காடுகள்:
உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகளில் ஒன்று சுந்தரவன காடுகள், இவை மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் இருந்து தெற்கு வங்காளதேசத்தில் உள்ள பாகர்ஹாட் மாவட்டம் வரை நீண்டுள்ளது. சுந்தரவன காடுகளில் சுந்தரி மரங்களில் இருந்து வெளியாகும் வேர்களின் நறுமனம் உங்களுக்கு புதிய புத்துணர்சியை அளிக்கும் என நம்புகிறோம். மேலும், ஆறுகளில் படகு சவாரி செய்தும் நீங்கள் மகிழலாம்.

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், காடுகளுக்குள் ராயல் பெங்கால் புலிகளையும், சதுப்பு நிலத்தில் கங்கை முதலைகளையும் கூட நீங்கள் காணலாம். இந்த விலங்குகளைத் தவிர, ஹைனாக்கள், பாம்புகள் மற்றும் பல அரிய வகை இனங்களையும் நீங்கள் காணலாம். இதைதொடர்ந்து கானாக் தீவுக்குச் சென்றால், அங்கு நீங்கள் ஏராளமான ஆலிவ் ரிட்லி ஆமைகளையும், சஜ்நேகாலி பறவைகள் சரணாலயத்தையும் பார்க்கலாம், மேற்கு வங்க மாநிலம் முழுவதிலும் உள்ள சில சிறந்த பறவை இனங்களைக் காண முடியும்.
அல்மோரா :
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா ஒரு அருமையான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். மேலும் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் பயணிக்க வேண்டிய இடங்களின் பட்டியலில் அல்மோரா முதலிடத்தில் உள்ளது. பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய மலைச் சரிவுகள், வெகுதொலைவில் பனி படர்ந்த சிகரங்களைக் கொண்ட அழகிய நகரம் இது. அல்மோரா காஷ்யப் மலைகளின் உச்சியில் 5 கிமீ மலையில் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கில் ஓடும் நீரோடைகள் அவற்றின் பாதையில் சலசலக்கும் ஒலி நம் மனதிற்கு ஒரு புதுவித அனுபவத்தை வழங்கிறது.

உத்தரகாண்டில் உள்ள இந்த சிறிய மலைப்பகுதியில் நீங்கள் கதர்மால் சூரியன் கோயில், பின்சார் ஜீரோ பாயிண்ட், காசர் தேவி கோயில் மற்றும் பின்சார் வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பல இடங்களை இங்கு காணலாம். கூடுதலாக, அல்மோராவின் இயற்கையான அமைதியைக் காண நீங்கள் மலையேற்றத்திற்குச் செல்லலாம்.
கட்ச்:
மலை பிரதேசங்களில் அதிகமாக சென்றுள்ளீர்கள் என்றால், நீங்கள் இந்த பலைவன பகுதிக்கு செல்லலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதி ஒரு வென்மையான பாலைவனமாகும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை, மணல் நிலப்பரப்பு படிக வெள்ளை நிறத்தில் தோன்றும், கிட்டத்தட்ட பனி போல் காட்சியளிக்குமாம். மேலும் இந்த மாதங்களில் ராஜஸ்தானில் கலை மற்றும் பராம்பரியத்தை நீங்கள் கானலாம்.
கட்ச்சில் சியோட் குகைகள், ஐனா மஹால், காண்ட்லா துறைமுகம் மற்றும் ரோஹா கோட்டை உள்ளிட்ட சில இடங்கள் மறைந்துள்ளன. இது தவிர, கட்ச் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் சரணாலயம், இந்திய காட்டு கழுதை சரணாலயம், கடல் தேசிய பூங்கா மற்றும் கட்ச் பாலைவன வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம்.