
மயிலாடுதுறை மாவட்டத்தில் புல் போதையில் தனியார் பயணிகள் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் பூரன மதுவிலக்கு கேட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் பெண்கள் போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களில் பெரும்பாலும் மது போதையில் தான் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனையே சென்றூ வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் பேருந்து ஓட்டுநர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் தஞ்சாவூரில் இருந்து சீர்காழி வந்த தனியார் பேருந்து, பழையாறில் இருந்து சீர்காழி வந்த அரசுப்பேருந்தும் நுழைய முற்பட்டது. அப்போது தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை நுழைய விடாமல் வாக்குவாததில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இதனையடுத்து தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும், ஆட்டோ ஓட்டுநரையும் தனியார் பேருந்து ஓட்டுநர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனைதொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர் மீது மது வாசனை வீசியதால், அவரை புதிய பேருந்து நுழையத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மது போதையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். அதில் அவர் போதையில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து பேருந்தை இயக்க அனுமதி மறுத்த போலீசார் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். இந்த சம்பவத்தால் சீர்காழி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.