
அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றம் அதானி மற்றும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ள நிலையில் ராகுல் காந்தி பிரதமர் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், அதானியை பிரதமர் பாதுகாப்பதால் தான் தொடர்ந்து அதானி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார் என்றார். மேலும், இந்திய சட்டங்களை மட்டுமல்ல சர்வதேச சட்டங்களையும் தொழிலதிபர் கௌதம் அதானி கடுமையாக மீறி இருக்கிறார் இவை இவை அனைத்திற்கும் அவர் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவின் எந்த ஒரு விசாரணை அமைப்பும் அதானிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது காரணம் அத்தனை விசாரணை அமைப்புகளையும் பிரதமர் நரேந்திர மோடி சிதைத்து விட்டார் என பேட்டியளித்துள்ளார்.