
தனிப்பட்ட கொலைக்கும் சட்ட ஒழுங்கிற்கு சம்பந்தமில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்,பாரதி, தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் கொலைகளை எல்லாம் சட்டம் ஒழுங்கோடு எடப்பாடி பழனிசாமி தொடர்பு படுத்தி பேசி வருகிறார். தனிப்பட்ட கொலைக்கும் சட்ட ஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தான் சட்ட ஒழுங்கு பிரச்சனை என தெரிவித்துள்ளார். மேலும் 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கொலைகள் நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், திமுக ஆட்சியில் கொலைகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மனசாட்சியை அடகுவைத்து விட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசின் செயல்பாட்டில் 54 சதவீத மக்கள் திருப்திகரமாக உள்ளதாகவும், கொலைகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை ஆனால் அதை பற்றி பேச எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாம்க்கு தகுதி இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி தவறாக பிரச்சாரம் செய்தும் கூட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்றார்.