
6 side effects of having too much turmeric
தமிழக மக்களிடம் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கும் மஞ்சள் அதிகளவு எடுத்துக்கொண்டால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழக மக்களின் புனிதமான ஒன்றாக மஞ்சள் உள்ளது. ஆன்மிகம் மற்றும் சமையலில் மஞ்சளில் பங்கு அதிகமாக உள்ளது. அதிகமாக உட்கொள்ளும் மஞ்சள் காரணமாக ஏற்படும் 6 பக்க விளைவுகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
செரிமானக் கோளாறு:
அதிகப்படியான மஞ்சளாஇ உட்கொள்ளும் நபர்களுக்கு பித்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிகப்படியான மஞ்சள் அமில அளவை அதிகரித்து செரிமான எரிச்சலை ஏற்ப்படும் வாய்ப்புள்ளதாக . இதனால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாம்.
சிறுநீரகத்தில் கற்கள்:
மஞ்சளில் ஆக்சலேட்டுகள் அதிகமாக உள்ளன. அதிகப்படியான மஞ்சளை உட்கொள்ளும் போது, ஆக்சலேட்டுகள் உடலில் உள்ள கால்சியத்துடன் பிணைந்து கால்சியம் ஆக்சலேட் படிகங்களை உருவாக்கும். இவை நாளடைவில் சிறுநீரக கல்லாக உருவாக வாய்ப்புள்ளது.
இரத்த தடிமத்தை குறைக்கும்:
அதிகப்படியான மஞ்சள் ஆண்டிகோகுலண்ட் இரத்தை மெலிக்கும் விளைவுகளை ஏற்ப்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் அறுவை சிகிச்சைஒ செய்பவர்களுக்கு ஆபத்தை ஏற்ப்படுத்தும் என கூறப்படுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு:
மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், உடலில் உள்ள இரும்புச்சத்தை அதிக அளவு உறிஞ்சும் என கூறப்படுகிறது. இதனால் சிலருக்கு நாளடைவில் இரும்புச்சத்து குறைபடு, இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளதாக வேளாண்மை மற்றும் உணவு வேதியியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ரத்த அழுத்தம்:
மஞ்சள் குறைந்த ரத்தை அழுத்தை ஏற்படுத்தக்கூடுமாம். குறிப்பாக உயர் ரத்த அழுத்த மருத்துகளை உட்கொள்பவர்களுக்கு மஞ்சள் குறைந்த ரத்த அழுத்ததிற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
தலைவலி மற்றும் தலைச்சுற்றல்:
மஞ்சளில் உள்ள குர்முமின் அமிலம் அதிகளவு உட்கொள்ளும் போது, சிலருக்கு தலைவலி மற்றும் தலை சுற்றலை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமாம்.
குறிப்பு: இது பொதுவான மருத்துவ குறிப்புகள் மட்டும். உடல்நல பிரச்சனைகளுக்கு மருத்துவரை அனுகி அவரது அறிவுரையின் படி செயல்படவும்.