
AR Rahman-wife Saira's
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் நவம்பர் 19 அன்று திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதற்கான முடிவை அறிவித்தனர். ரஹ்மானுக்கும் சாய்ராவுக்கும் திருமணமாகி 29 ஆண்டுகள் ஆகிறது. 30ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில், வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ராஜுமானும் அவரது மனைவியும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக அவரது மகன் இருவரது தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கதீஜாவும் அமீனும் தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி (sic)”என்று குறிப்பிட்டுள்ளார்.