
சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு வழைபாடு நடைபெற்றது. அந்த வகையில், வாழப்பாடி சந்தைப்பேட்டை பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு மாலை 7 மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பாக அலங்காரம் மற்ற சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.