
srilanka new minister cabinet take sworn
இலங்கையில் நவம்பர் 14ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. 225 இடங்களில் 159 இடங்களோடு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அக்கட்சி பெற்றது.இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவ இன்று(நவம்பர் 18) பொறுப்பேற்றுள்ளது. அமைச்சரவையில், மொத்தம் 22 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், இருவர் தமிழர்கள்.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்ற பின்னர் இடைக்காலத் பிரதமராக அறிவிக்கப்பட்ட ஹரிணி அமர சூரிய மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவருக்கு கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வித்துறை கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், நிதித்துறையை அதிபர் அனுரகுமார திசநாயக்க வைத்துக்கொண்டார். கடல்வளத்துறை அமைச்சர் பதவி ராமலிங்கம் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பதவியேற்புக்குப் பின்னர் பேசிய அனுர குமார திசாநாயக்க, பொதுமக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் அரசாக தம்முடைய அரசாங்கம் இருக்கும் எனவும் இனிமேல் பிரிவினை அரசியலுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் பேசிய இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியப் பயணத்தை மேற்கொள்வதாகவும், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள அனுரகுமார திசநாயக்கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது