
நவம்பர் 18, சென்னை (Fashion News): சென்னை ஆழ்வார்பேட்டையில், நாளை நவ-19ம் தேதி நண்பகல் 12 மணி அளவில், டெல்லியின் புகழ்பெற்ற Nainpreet The Collective luxury மல்டி டிசைனர் ஸ்டோர், சென்னையின் பிரத்யேக Eleganzaa-வுடன் இணைந்து பிரத்யேக பாகிஸ்தானி ஆடைகளை காட்சிப்படுத்த உள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சியில், சனா சஃபினாஸ், அன்சாப் ஜஹாங்கீர் மற்றும் சானியா மஸ்கதியா போன்ற பிரபலமான வடிவமைப்பாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிகழ்வினை நவம்பர் 25ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பட்டையின் மையத்தில் அமைந்துள்ள Eleganza India ஆடம்பரமான ஷாப்பிங் அனுபவத்தை தரக்கூடிய இடமாகும். உலகெங்கும் உள்ள சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய டிசைன்களின் படைப்புகள் Eleganza India-வில் கிடைக்கும். தங்களை அழகாக, ப்ளஸண்டாக, பேஷனா காட்ட விரும்பும் அனைவருக்கும் இது சொர்க்கம் என்றே கூறலாம், மிகச்சிறந்த பேஷனான ஆடைகளின் பட்டியலையும் நீங்கள் இங்கு பெறலாம். ஒவ்வொரு ஷாப்பிங் அனுபவம், தனித்தன்மையானதாக, ஆடம்பரமான வகையில், மறக்கமுடியாதபடி நினைவுகளில் நிற்கும் வகையில் இருக்கும். Nainpreet-ன் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்பாளர்களின் படைப்புகளை சென்னை மாநகரம் முதல் முறையாக காணவுள்ளது.