
1-தினமும் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் முதுமை காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம்.
2-ஒரு முறை சிரிக்கும் போது இரத்த ஓட்டம் 20 சதவீதம் அதிகரிக்குமாம்.
3-உலர் திராட்சை பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய் சீராகும்.
4-வேப்பிலையை வறுத்து, சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமாகும் என கூறப்படுகிறது.
5-வெந்தயம் மற்றும் வேர்க்கடலையை இரவு ஊற வைத்து அதனுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக திறன் அதிகரிக்குமாம்.
6-நரம்பு பலவீனமாக உள்ளவர்கள் அரை ஸ்பூன் வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வெந்நீரில் கலந்து 4 நாட்கள் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் சரியாகுமாம்.
7-காலை உணவை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும், இது மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படாமல் மூளை சிதைவை ஏற்ப்படுத்துமாம்.
8-கரிசாலை, கீழாநெல்லி கீரை வகைகள் உணவில் சேர்த்துக்கொண்டால் கொழுப்பு படிவதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
9-உடலில் தேவையற்ற கொழுப்பு சேருவதை தடுக்க அடிக்கடி உணவில் இஞ்சி, பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.
10-எலுமிச்சை இலையின் நறுமணத்தை 2 நிமிடங்கள் சுவாசித்தால் ஒற்றை தலைவலி, மன அழுத்தம் குறையுமாம்.
குறிப்பு: இவை அணைத்தும் பொதுவான தகவல்கள் மட்டும், உங்கள் உடல் நல பிரச்சனைக்கு மருத்துவரை ஆலோசித்து உரிய சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.
1 thought on “Health Tips: நலமுடன் வாழ…நச்சுனு 10 டிப்ஸ்..!”