
ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பலர் மலை ரயில், தவரவியல் பூங்கா, படகு சவாரி சென்று பயணத்தை முடித்துக்கொள்கிறார்கள். ஆனால் ஊட்டியில் நீங்கள் பார்க்காத இன்னிம் பல இடங்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா..? ஊட்டிக்கு செல்லும் நீங்கள் வழக்கமாக செல்லும் மலை ரயில், படகு சவாரி செய்து விட்டு நேரமிருந்தால் இங்கேயும் சென்று பாருங்கள்.
கல் வீடு-ஸ்டோன் ஹவுஸ்:

ஊட்டியில் கட்டப்பட்ட முதல் பங்காளா ஸ்டோன் ஹவுஸ் ஆகும். பிரிட்டிஷ் கட்டிடக்கலையால் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கு நீங்கள் ஊட்டியின் பழமையான மரங்களாக ஓக் மரங்களை காணலாம். ஸ்டோன் ஹவூஸ்க்கு அருகில் எல் வடிப்வ ஏரி ஒன்றும் உள்ளது. சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இடத்தை பார்வையிடலாம். நவம்பர் முதல் ஜனவரி மாதங்களுக்கு இடப்பட்ட காலத்தில் இந்த பங்களா பனியால் மூடப்பட்டிருக்கும்.
குறிப்பு: கல் மாளிகைக்கு உங்களை அழைத்துச் செல்ல உள்ளூர் பேருந்துகள் இல்லை. நீங்கள் உங்கள் வாகனத்தில் செல்ல வேண்டும் அல்லது வாடகை வண்டியை வாடகைக்கு எடுக்க வேண்டும்.
எம் & என் சாக்லேட் அருங்காட்சியகம்:

நீங்கள் அல்லது உங்களது குடும்பத்தினர்கள் சாக்லேட் விரும்பிகள் என்று உங்களுக்கு இந்த இடம் சிறந்த இடமாகும். ஊட்டி-மைசூர் சாலையில் உள்ள சாக்லேட் அருங்காட்சியகம். சாக்லேட் வரலாற்ரையும், கருவிகள் மற்றும் நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்தியாவிலேயே 18 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சாக்லேட் பார் தயாரித்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இவை இடம்பிடித்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட சாக்லேட்டுகள் சாக்லேட் ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அருங்காட்சியகத்தின் நுழைவு கட்டணமாக ஒருவருக்கு. ரூ20 வசூலிக்கப்படுகிறது.
1 thought on “ஊட்டியில் இந்த இடமெல்லாம் தெரியுமா…?”