
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக சாதனைபடைத்த திரைப்படம் புஷ்பா. இப்படம் ஓடிடியில் வெளியான பிறகும் பலர் படத்தைப் பார்த்தனர்.
இதுவரை இல்லாத புது லுக்கில் அல்லு அர்ஜூன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அப்படத்திற்கு பிறகு பாகம் 2 எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நற்செய்தியாக இந்தாண்டு டிசம்பர் 5ம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்தச்சூழ்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாகவும், மிரட்டலாகவும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. ))ஃபகத்பாசில் மொட்டைத்தலையுடன் வெறித்தனமாக டிரைலரில் காட்சியளிக்கிறார். இப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது

ட்ரெய்லரைக்காண கீழே லிங் உள்ளது