
keerthy-suresh-marriage-on-december
தென்னிந்திய சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்தி இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.
நடிகர் சுரேஷ்- நடிகை மேனகா தம்பதியின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக விளங்கிவருகிறார். ரெமோ, பைரவா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், அவரின் நடிப்புத்திறமை அதிகளவில் பேசப்பட்ட படமென்றால் நடிகையர் திலகம் படம்தாான். தொடர்ச்சியான வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகைகள் குறித்த செய்திகள் எப்போது இணையத்தில் தீயாய் பரவும்.

அந்தவகையில், அவரின் திருணம் குறித்த செய்தி தற்போது வைரலாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரை அவர் காதலிப்பதாக செய்திகள் உலாவந்தன, அதுபோல கடந்தாண்டு இசையமைப்பாளருடன் அவர் டேட்டிங் செய்துவருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்தச் செய்தியை கீர்த்தி சுரேஷின் தந்தையார் மறுத்து பேசியிருந்தார்.
இந்தச்சூழ்நிலையில், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை மணம் முடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், திருமணம் டிசம்பர் மாதம் கோவாவில் வைத்து நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.மாப்பிள்ளை கீர்த்தி சுரேஷின் உறவினர் என்று கூறப்படுகிறது.