
Armstrong's wife contest in Tiruvallur constituency: Pa. Ranjit speech..!
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வைப்போம் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் கொலையில் இழுக்கபடாமல் உள்ளவர்களை , மறு விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு தேசிய கட்சியின் தலைவரை கொலை செய்ய கடந்த 2018ம் ஆண்டு முதல் திட்டமிட்டுள்ளனர். அதுவரை உளவுத்துறை, போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர் எனா சந்தேகம் எழுகிறது என்றார்.
மேலும் திமுக, அதிமுக என எந்த ஆட்சி நடந்தாலும் நாங்காளும் கேள்வி கேட்போம், கேள்வி கேட்பது எங்களது ஜனநாயக உரிமை என்றார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். வெற்றி, தோல்வி விசயமல்ல, வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்புவதை நாம் திட்டமாக வைத்திருக்க வேண்டும் என பேசினார்.