
Nations first long range hypersonic missile tested successfully in odisa
ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில், வைத்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணையானது 1500 கி.மீ-க்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்லது. இந்த இந்தியா ராணுவத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இது, ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் அறிவியலாளர் துணையுடன் உருவாக்கப்பட்டது.
சோதனையானது DRDO மற்றும் ராணுவ அறிவியலாளர் முன்னிலையில் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், DRDO அமைப்பையும், ஏவுகணை சோதனைக்கு பங்காற்றியவர்களையும் பாராட்டியுள்ளார். நாட்டின் முதல் நீண்டதூர இலக்குகளைத் தாக்கும் நாட்டின் முதல் ஹைபர்சோனிக் ஏவுகணையாகும், இது வரலாற்று நிகழ்வாகும்