
மேய்ச்சல் கால்நடை கணக்கெடுப்பு விளக்க கூட்டம்..!
இன்று 16-11-2024 மானாமதுரை சிப்காட் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வலசை வந்து பட்டி அமைத்துள்ள மேய்ச்சல் சமூகக் மக்களிடம் இந்திய அரசு நடத்தும் 21வது கால்நடை கணக்கெடுப்பில் முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ள மேய்ச்சல் கால்நடை கணக்கெடுப்பு குறித்து விளக்கி துண்டறிக்கை வழங்கி விளக்க கூட்டம் நடத்தினோம்.நிகழ்வில் மானாமதுரை பகுதி கணக்கெடுப்பு பொறுப்பு அதிகாரி கால்நடை மருத்துவர் கவியரசன் கலந்து கொண்டு கணக்கெடுப்பு குறித்து விளக்கி பேசினார்.
தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு தலைவர் இராசீவ் காந்தி கணக்கெடுப்பு பயன்கள் பற்றி விளக்கி கூறினார்.புலிக்குளம் கிடை மாடு வளர்க்கும் இராமகிருஷ்ணன் ,மணி கண்டன்,செம்மறி ஆடு வளர்க்கும் வேளாணி ரமேஷ்,மிளகனூர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு
தொடர்புக்கு:9677517899