
After HC denies bail on telugu community case-police seek to arrest Kasturi
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்ட நிலையில், அவரைப் பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவான கஸ்தூரி வெளிமாநிலத்தில் தலைமறைவாகியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அவரை பிடிக்க விரைந்துள்ளனர்.
பிரமாணவர்களை இழிவாகப் பேசுவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரவேண்டும் என சென்னையில் பிராமணர்கள் சங்கம் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியது. அதில், பேசிய கஸ்தூரி தெலுங்கு மக்கள் மீது அவதூறான கருத்தைப் பேசியதாக அவர் மீது பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்த வழக்குகளில் இருந்து முன் ஜாமீன் கோரிய கஸ்தூரிக்கு, உயர் நீதிமன்றம் நவம்பர் 14ம் தேதி முன் ஜாமீனை மறுத்தது குறிப்பிடத்தக்கது.