
India vs southafrica 4th t-20 India beat sa by 135 runs
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டையும் மட்டுமே இழந்திருந்த இந்தியா, 283 ரன்கள் எடுத்த இந்தியா தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்களை நிர்ணயித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களையும் அதிரடியாக ஆடி எடுத்தனர். இதன்பிறகு பெரிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றியைப் பெற்றது.இந்திய சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடைர 3-1 என்ற கணக்கில் வென்றது. அதிரடியாக ஆடி 120 ரன்கள் எடுத்த திலக் வர்மா ஆட்டநாயகனும், தொடர்நாயகனவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடிய திலக் வர்மா மொத்தமாக 280 ரன்களை விளாசியிருக்கிறார்.