
விருதுநகர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 18ம் தேதி திங்கள் கிழமை முருகன் மஹாலில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் பெண்கள் கலந்து கொண்டு தங்களது தொழில் வாய்ப்புக்களை பெருக்க பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபார இணைப்பு, தொழில் மேம்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் , சிறந்த தொழில்முனைவோருக்கான வெற்றிக்கதைகள், விருது வழங்குதல், சாதனையாளகள் வழிகாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு சித்ரா, 8056582619 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.