
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.படம் வெளியாகிய கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டு, உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ.14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியளவில் ரூ.22 கோடி, உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என நம்பப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்புகள் இருப்பது சந்தேகமே. இனிவரும் நாட்களில் வசூல் அதிகரிக்குமா இல்லை குறையுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.
படத்தின் விமர்சனம்:
படத்தைப் பார்த்துவிட்டு வெளிவரும் ரசிகர்கள் படம் குறித்து பேசுகையில், சூர்யாவின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும், அவருக்காக படத்தைப் பார்க்கலாம் எனவும் கூறுகின்றனர். இப்படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெரும் நோக்கில், நடிகர் சூர்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தில் தன்னுடைய முழு உழைப்பைச் செலுத்தியிருந்தார். ஆனால், ரசிகர்களின் விமர்சனங்களைக் கொண்டு பார்க்கையில், அவரின் உழைப்புக்கு தக்க பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.