
vaiko admitted in apollo hospital for small surgery
மதிமுக பொதுச்செயலாளர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நெல்லையில், தனது சகோதரர் வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததில் வலது தோள்பட்டையில் வைகோவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு தோள்பட்டையில் பிளேட் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்தாவாறு தன்னுடைய உடல்நலம் குறித்து வைகோ பேசிய வீடியோ வெளியானது
சிறிதுநாட்கள் மருத்துவமனையில் இருந்துவீட்டு வீடு திரும்பி அவர், சில பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்தச்சூழ்நிலையில், அவரது வலது தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.