
Netanyahu's Message to the Iranian People
டெல் அவிவ்(நவ 13): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அதி உயர் தலைவரா அலி காமெனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் மக்களின் வளர்ச்சியை முதன்மைப் பணியாக வைக்காமல் இஸ்ரேலை அழிப்பதை முதன்மைப் பணியாக காமெனி வைத்துள்ளார் எனக் கூறி ஈரானிய மக்களுக்கு சில செய்திகளை வீடியோ மூலம் நெதன்யாகு கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இஸ்ரேல் வெளியீட்டுள்ள வீடியோவில், ஈரான் தலைவர்கள் தங்கள் நாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு இஸ்ரேலை அழிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டுள்ளனர். இது அவமானகாரமானது என நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும், “ஈரானிய மக்களாகிய நீங்கள் இந்தப் போர் வேண்டும் என நினைக்கவில்லை என்பது எனக்குத் தெரியும், நானும்கூட இந்தப்போர் வேண்டும் என நினைக்கவில்லை. ஒரே ஒரு சக்தி அபாயமான கட்டத்திற்கு உங்களைத் தள்ளுகிறது. நாளுக்குநாள் இந்தப்பிராந்தியம் வலுவிழந்து கொண்டிருக்கும் அதேநேரம் இஸ்ரேல் வலுவாகிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலை விட காமேனி அரசாங்கம் மிகுந்த அச்சத்தில் இருக்கிறது. அதனால்,தான் காமெனி உங்கள் கனவுகளை நசுக்கவதில் அதிக சிரத்தை எடுக்கிறார். உங்கள் கனவுகளை சுமந்துகொண்டு சுதந்திரம் வேண்டி உங்கள் உதடுகள் விசும்புவது எனக்குத் தெரியும், நம்பிக்கையை விடாதீர்கள், உங்கள் கனவுகளை விட்டுவிடாதீர்கள் இஸ்ரேல் உங்களுக்கு துணை நிற்கும்.
எதிர்கால ஈரான், இஸ்ரேல் ஆகிய இருநாடுகளின் வளர்ச்சிக்கு இருநாடுகளிடையே அமைதி மற்றும் ஒத்துழைப்பு அவசியம், அந்தக் கனவை நாம் அடைவோம். சில வாரங்களுக்கு முன்பு நேரடியாக ஈரான் மக்களிடம் பேசியிருந்தேன். அதை பல மில்லியன் கணக்கான மக்கள் பார்த்திருந்தார்கள். அதன்பிறகு இஸ்ரேலைத் தொடர்பு கொண்ட சிலர் சமீபத்தியத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பெலஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு சுமார். 2.3 பில்லியன் டாலர்களை செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் இஸ்ரேலுக்கு சிறிய பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஈரான் மக்களாகிய உங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு என யோசித்துப் பாருங்கள். அந்தப்பணத்தை வைத்து உங்களுக்கு நல்ல மருத்துவமனைகளையும், சாலைகளையும் காமெனி அரசு கட்டிக் கொடுத்திருக்க முடியும். ஆனால், உங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு, காமெனி மொத்த உலகையும் உங்கள் நாட்டுக்கு எதிரானதாக மாற்றிவிட்டிருக்கிறார்.
ஈரான் இஸ்ரேல் மீது 200 பெலஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இதேபோல் ஈரானிய மக்களுக்கு சில செய்திகளை வீடியோ மூலம் நெதன்யாகு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.