
வள்ளுவர் சிலை வெள்ளி விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1ம் தேதிகளில், வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாக முலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது சமூக ஊடகப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், குமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து கால் நூற்றாண்டு ஆகிறது. இதனைக் கொண்டாட வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.உலகத்திற்கு பொதுமறை வழங்கியவர் வள்ளுவர். ஆனால், ஒரு கும்பல் அவருக்கு காவிச்சாயம் பூச நினைப்பதாக அவர் குற்றச்சாட்டை வைத்தார்.
மேலும், பெரியார், அண்ணா, கலைஞர் திருக்குறள், திருவள்ளுவருக்கு செய்த சிறப்புகளையும் குறிப்பிட்டு , மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும் எனவும், மாவட்ட வாரியாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.