
பல்வேறு சைபர் மோசடிகளில் ஈடுபட்ட 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் புகார்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி போலீசார், சைபர் மோசடிகளில் ஈடுபட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் 17 ஆயிரம் வாட்ஸ் ஆப் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி அத்தகைய கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சந்தேகத்திற்கிடமான வாட்ஸ் அப் கணக்குகளை கண்டறிந்துள்ள உள்துஇறை அமைச்சகம் அவற்றை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. 2024ம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 20,140 கோடி மதிப்பிலான மோசடிகள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.